விஷம் குடித்து ஹோட்டல் தொழிலாளி தற்கொலை
By DIN | Published On : 26th April 2019 05:14 AM | Last Updated : 26th April 2019 05:14 AM | அ+அ அ- |

பட்டுக்கோட்டையை அடுத்த துவரங்குறிச்சி காமராஜர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ம.சூரியா (24). திருமணம் ஆகாதவர். சென்னையில் உள்ள ஹோட்டலில் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.
இவர் 4 ஆண்டுகளுக்கு முன் குடல்வால் அறுவை சிகிச்சை செய்து கொண்டாராம். அதிலிருந்து தீராத வயிற்று வலி ஏற்பட்டு அதனால் அவதிபட்டு வந்தார். பல இடங்களில் சிகிச்சை எடுத்தும் நோய் குணமாகவில்லையாம்.
இதனால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக கடந்த திங்கள்கிழமை (ஏப்.22) இரவு சென்னையிலிருந்து துவரங்குறிச்சியில் உள்ள தனது வீட்டுக்கு வந்த சூரியா விஷம் குடித்துள்ளார்.
ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சூரியா அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (ஏப்.25) அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாயார் தனலெட்சுமி அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.