தஞ்சாவூர் அருகேயுள்ள திருப்பூந்துருத்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றத் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் (பொ) ராஜா தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவரும், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரிப் பேராசிரியருமான வெ. சுகுமாரன் சிறப்புரையாற்றினார்.
அறிவியல் மன்றச் செயலர் இளஞ்சியம், டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் பாக்கிய ரெஜினாமேரி, அனிதா ஆரோக்கியசெல்வி, அறிவியல் ஆசிரியர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.