சுடச்சுட

  

  படைவெட்டி மாரியம்மன் கோயிலில் மாசி மாத வீதி விழா தொடக்கம்

  By DIN  |   Published on : 12th February 2019 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கும்பகோணம் மடத்து தெருவில் உள்ள படைவெட்டி மாரியம்மன் கோயிலில் 131-வது மாசி மாத வீதி விழா திங்கள்கிழமை தொடங்கியது.
  இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத திரு நடன வீதியுலா நடைபெறும். இதன்படி, மாசி மாதத்தை முன்னிட்டு, பிப். 4-ம் தேதி பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கணபதி ஹோமத்துடன் காப்பு கட்டும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
  பிப். 17-ம் தேதி முதல் பச்சை காளி, பவளக் காளியம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு பிப். 20-ம் தேதி வரை கும்பகோணம் நகரப் பகுதியில் வீதியுலா நடைபெறவுள்ளது. 21-ம் தேதி இரவு திருநடனக்காட்சியுடன் கோயிலை அடைகிறது. 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai