கருப்பு, வெள்ளை நிறங்கள் தனித்தனி வண்ணங்கள் அல்ல

கருப்பு, வெள்ளை நிறங்கள் தனித்தனி வண்ணங்கள் அல்ல என்றார் சிக்கன கட்டுமானத் துறை வல்லுநர் சு. ராஜேந்திரன்.

கருப்பு, வெள்ளை நிறங்கள் தனித்தனி வண்ணங்கள் அல்ல என்றார் சிக்கன கட்டுமானத் துறை வல்லுநர் சு. ராஜேந்திரன்.
தஞ்சாவூரில் ஏடகம் அமைப்பு சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஞாயிறு முற்றம் சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவர் பேசியது:
கருப்பு, வெள்ளை என்பது வண்ணங்களே அல்ல. ஒட்டுமொத்த நிறங்களின் தொகுப்பே கருப்பு, வெள்ளை நிறங்கள். வெள்ளை இல்லாதபோது நிலவும் இருட்டே கருப்பு நிறம். உண்மையில் இவை இரண்டும் தனித்த வண்ணங்கள் கிடையாது.கருப்பு வண்ணம் அதிகாரத்தை,  உரிமையைக் குறிக்கிற சின்னமாக ஆங்கிலேயர்கள் பயன்படுத்தினர். அதை அடியொட்டியே நீதிமன்றங்களில் கருப்புச் சின்னத்தைப் பயன்படுத்துகிறோம். 
கருப்பு மறுபுறம் துக்கத்தின் சின்னமாகவும் நம்மிடையே காணப்படுகிறது. பார்சி மக்கள் வெள்ளை நிறத்தை துக்கத்தின் அடையாளமாக வெளிப்படுத்துகின்றனர்.
பொதுவாக வெள்ளை நிறம் புனிதத்தையும், தூய்மையையும் குறிப்பிடுகிறது. இதேபோல, மஞ்சள் நிறமானது புனிதமாகக் கருதப்படுவதுடன்,  மருத்துவ ரீதியில் கிருமி நீக்கியாகப் பயன்படுகிறது.
இதனால்தான் மஞ்சள் நீர் தெளித்தல் நம் மக்களின் வாழ்வில் பெரு நிகழ்வாக இன்றும் தொடர்கிறது. மஞ்சள் நிறத்தைப் போல சிவப்பு நிறமும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது. அதனால்தான் மங்கலகரமான விழாக்களில் மஞ்சளில் இருந்து தயாரிக்கப்படும் சிவப்பு நிற குங்குமம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பச்சை நிறம் வளமை, செழுமை, துணிவைக் குறிப்பிடுகிறது. நீல வண்ணம் ஆன்மிகத்தைக் குறிக்கிறது.இப்போது, புதிதாகக் கட்டப்படுகிற சில வீடுகளின் சுவர்களில் அடர் வண்ணங்கள் பூசுகின்றனர். இந்த வண்ணங்கள் எதிர்மறை சிந்தனையை ஏற்படுத்தி கேடு விளைவிக்கும் என்றார் ராஜேந்திரன்.
மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் சோ. கண்ணதாசன் தலைமை வகித்தார்.  ஏடகம் செயலர் பா. விஜி, மாணவர்கள் வி. சண்முகவள்ளி, கி. அருண்மொழித்தேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com