கும்பகோணத்தில் ரயில் மறியல் முயற்சி: 15 பேர் கைது
By DIN | Published On : 04th January 2019 08:41 AM | Last Updated : 04th January 2019 08:41 AM | அ+அ அ- |

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை தரிசனம் செய்ய அனுமதித்த கேரள மாநில அரசைக் கலைக்க வலியுறுத்தி கும்பகோணத்தில் வியாழக்கிழமை ரயிலை மறிக்க முயன்றதாக இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், சபரிமலையில் கேரள அரசின் பலத்த பாதுகாப்புடன் இரு பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய புதன்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டனர். இதற்கு அனுமதித்த கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயலை கண்டித்தும், அம்மாநில அரசை உடனடியாகக் கலைக்க வலியுறுத்தியும், சபரிமலை ஐயப்பன் கோயில் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மாற்றாக மத்திய அரசுப் புதிய அவசர சட்டத்தைப் பிறப்பிக்கக் கோரியும் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியினர் வியாழக்கிழமை காலை சோழன் விரைவு ரயிலை மறிக்க முயன்றனர்.
இப்போராட்டத்துக்குக் கட்சியின் மாநிலச் செயலர் பாலா தலைமை வகித்தார். இதில், மாநில இளைஞரணி செயலர் கார்த்திக்ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.