திருவையாறு நீதிமன்றத்தில் கண்காணிப்பு கேமராக்கள்
By DIN | Published On : 14th June 2019 09:29 AM | Last Updated : 14th June 2019 09:29 AM | அ+அ அ- |

திருவையாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
திருவையாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நீதிமன்றத்திலும், நீதிமன்ற வளாகத்திலும் தவறுகள் ஏதேனும் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 23 கண்காணிப்பு கேமராக்கள், ஒரு சுழலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இவற்றை வழக்குரைஞர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன், மூத்த வழக்குரைஞர் புலமை வெங்கடாஜலம் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தனசேகரன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத் திட்டத் துணை ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.