மதுக்கூர், அதிராம்பட்டினம் பகுதிகளில் ஜூன் 15 மின்தடை
By DIN | Published on : 14th June 2019 09:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மதுக்கூர், அதிராம்பட்டினம் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 15) மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் மதுக்கூர் நகரம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, காடந்தங்குடி, தாமரங்கோட்டை, அதிராம்பட்டினம், துவரங்குறிச்சி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.