குடந்தை அரசுப் பள்ளியில்  நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு

கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவது

கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவது என அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கடந்த 11.11.1919 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியின் நூற்றாண்டு விழா வருகிற நவம்பர் மாதம் வருகிறது. இதை முன்னிட்டு, இப்பள்ளியில் கடந்த 1956-ம் ஆண்டு முதல் 1970-ம் ஆண்டு  வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் மாணவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான ரவீந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் மாணவரும், பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியருமான கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகவேலு, வடிவேல் சிறப்புரையாற்றினர். 
இப்பள்ளியின் நூற்றாண்டு விழா நடைபெறுவதை முன்னிட்டு இப்பள்ளியில் படித்த மாணவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, விழாவைச் சிறப்பாக நடத்துவது, தனியார் பள்ளிக்கு இணையான ஸ்மார்ட் வகுப்புகளை முன்னாள் மாணவர்களின் சொந்த நிதியைக் கொண்டு உருவாக்குவது, பள்ளிக்குத் தேவையான அனைத்து பர்னிச்சர்களை வாங்கிக் கொடுப்பது, பள்ளியின் சுற்றுச் சுவரை மேலும் உயர்த்துவது, அனைத்து அடிப்படை தேவைகளையும் செய்து தருவது, ஆண்டுதோறும் 10 மற்றும் ப்ளஸ் 2 வகுப்பு அரசுப் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை ஊக்குவிப்பது, ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்குக் கல்விக்குத் தேவையான செலவுகளை ஏற்பது, மாணவர்களின் மதிப்பெண் பெறுவதற்குக் காரணமான ஆசிரியர்களையும், ஓய்வு பெறும் ஆசிரியர்களையும் ஆண்டுதோறும் கெளரவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
பள்ளித் தலைமையாசிரியர் சாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com