வருவாய்- ஊரக வளர்ச்சித் துறையினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 06th March 2019 10:01 AM | Last Updated : 06th March 2019 10:01 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களைத் தேர்தல் ஆணையம் மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் செய்ததைக் கண்டித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஏற்கெனவே, இப்பிரச்னைக்காக இரு சங்கத்தினரும் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டதுக்குக் கூட்டு இயக்கத் தலைவர்கள் ராஜன், இளங்கோ தலைமை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.