அதிராம்பட்டினம் கல்லூரியில் வேதியியல் விழா
By DIN | Published On : 22nd March 2019 08:36 AM | Last Updated : 22nd March 2019 08:36 AM | அ+அ அ- |

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வேதியியல் துறை சார்பில் வேதியியல் விழா 2019 வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், தஞ்சை பிரிஸ்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் பி.பார்த்திபன் பேசுகையில், கடின உழைப்பும், முயற்சியும் இருந்தால் மாணவர்கள் எதிலும் வெற்றி பெறலாம். மாணவர்கள் ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார். பின்னர், ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். பட்டிமன்ற நடுவர் அதிராம்பட்டினம் ஏ.அண்ணா சிங்காரவேலு பேசுகையில், மாணவர்கள் குறிக்கோளுடன் முயற்சி செய்தால் வாழ்கையில் மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் என்றார்.
விழாவில், அனைத்துப் போட்டிகளிலும் முதலிடம் பிடித்த வேதியியல் இரண்டாமாண்டு மாணவி ஜெயஸ்ரீக்கு 'பெஸ்ட் பெர்பாமன்ஸ்' விருது வழங்கிப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
விழாவுக்கு கல்லூரி வேதியியல் துறைத்தலைவர் பேராசிரியர் ஏ.எம். உதுமான் முகையதீன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் (பொ) எம்.முகமது முகைதீன் வாழ்த்தி பேசினார். பேராசிரியர் பி. முகமது சிராஜுதீன் வரவேற்றார். பேராசிரியர் என்.எம்.ஐ. அல்ஹாஜ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மாணவி ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...