ஆலத்தூரில் திமுக கூட்டணி நிர்வாகிகள் கூட்டம்
By DIN | Published On : 28th March 2019 07:49 AM | Last Updated : 28th March 2019 07:49 AM | அ+அ அ- |

மதுக்கூர் ஒன்றியம், ஆலத்தூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
திமுக மூத்த உறுப்பினர் ஆர்.ஆர்.ராமசாமி தலைமை வகித்தார். இதில் ஆலத்தூர் ஊராட்சி முன்னாள் தலைவர் மு.ரூஸ்வெல்ட் (திமுக), ஏ.ஆர்.எம். யோகானந்தம் (காங்கிரஸ்), இ.முருகேசன் (இந்திய கம்யூ), சு.வெற்றிச்செல்வன் (மார்க்சிஸ்ட் கம்யூ), வீ.காரிமுத்து (மதிமுக), மகேந்திரன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) ஆகியோர் பேசினர்.கூட்டத்தில், தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கத்தின் வெற்றிக்கு தீவிரமாக உழைப்பது, வீடு, வீடாக திண்ணைப் பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.திமுக ஊராட்சி செயலர் ஏ.வி.எஸ். திராவிடச்செல்வன் தலைமையில் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 10 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது. நிறைவில், திமுக உறுப்பினர் வி.டி.முருகேசன் நன்றி கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...