தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ. 3.20 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 28th March 2019 07:49 AM | Last Updated : 28th March 2019 07:49 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 3.20 லட்சம் ரொக்கத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் புதன்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, கேரளத்திலிருந்து பூம்புகாரில் மீன் ஏற்றுவதற்காக சென்ற லாரியைச் சோதனையிட்டபோது, ரூ. 1.20 லட்சம் இருந்தது. இந்த ரொக்கத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், அவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
கும்பகோணம்: இதேபோல, கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேசுவரம் கொத்துக் கோயில் சாலையில் பறக்கும் படை அலுவலர்கள் புதன்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனையிட்டபோது, ரூ. 2,99,530 இருப்பது தெரிய வந்தது. இதற்கான ஆவணங்கள் இல்லாததால், அத்தொகையைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...