தஞ்சாவூரில் மே 10 முதல்  கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு

தஞ்சாவூரில் மே  10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு நடைபெறஉள்ளது.
Updated on
1 min read


தஞ்சாவூரில் மே  10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு நடைபெறஉள்ளது.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலர் ஆர்.ஆர். காளிதாஸ் வாண்டையார் தெரிவித்திருப்பது: தஞ்சை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில், பல்வேறு பிரிவுகளில் மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு தஞ்சாவூர் பரிசுத்தம் நகரில் உள்ள ஒலிம்பியன் கிட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் 14 வயதுக்குள்பட்டோர் அணிக்கான (1.9.2005-க்குப் பிறகு பிறந்தவர்கள்) வீரர்கள் தேர்வு மே 10-ஆம் தேதி காலை 9 மணிக்கும், 16 வயதுக்குள்பட்டோர் அணிக்கான (1.9.2003-க்குப் பிறகு பிறந்தவர்கள்) வீரர்கள் தேர்வு மே 11-ஆம் தேதி காலை 9 மணிக்கும், 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கு (1.9.2000-க்குப் பிறகு பிறந்தவர்கள்) 12-ஆம் தேதி காலை 9 மணிக்கும் நடைபெறுகிறது.  
எனவே தகுதி உள்ளவர்கள் வெள்ளை சீருடை, உரிய வயது சான்றிதழ் மற்றும் உபகரணங்களுடன் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 9487304174, 7010324867 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com