பள்ளி ஆசிரியர்களுக்குஆங்கில மொழி திறன் பயிற்சி
By DIN | Published On : 05th May 2019 03:22 AM | Last Updated : 05th May 2019 03:22 AM | அ+அ அ- |

அதிராம்பட்டினம் இமாம் ஷாபி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழித் திறன் பயிற்சியளிக்கப்பட்டது.
இதில், பேராசிரியர் எஸ்.பர்கத் பேசுகையில், ஆசிரியர்கள் ஆங்கில மொழித் திறனை வளர்த்துக் கொள்ளவும், அதை மாணவர்களுக்கு எளிமையாக, இனிமையாக கற்பிக்கவும் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கினார். ஆங்கில மொழி பயிற்றுநர் சென்னை நவாஸ் பேசுகையில், ஆங்கில மொழி கற்றல், கற்பித்தல், மொழி உச்சரிப்பு ஆகியன குறித்து உரையாடல் மற்றும் பல்வேறு பயிற்சிகள் மூலம் விளக்கினார்.
நிகழ்ச்சிக்கு பள்ளி இணைச் செயலர் எம்.எஸ். சைபுதீன் தலைமை வகித்தார்.
பள்ளி துணைத் தாளாளர் எம்.எஸ். முகமது ஆஜம் வரவேற்றார். பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகம் சார்பில் எஸ்.எம்.கே. நூர் முகமது, பள்ளி ஆசிரியர்கள், உலமா, ஆலிமாக்கள், அலுவலகப் பணியாளர்கள்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.