பேராவூரணி அரசு மருத்துவமனையில் கட்டணமில்லா பிறப்பு சான்று வழங்கல்
By DIN | Published On : 15th May 2019 08:46 AM | Last Updated : 15th May 2019 08:46 AM | அ+அ அ- |

பேராவூரணி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு கட்டணமில்லா பிறப்பு சான்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
அரசு மருத்துவமனைகளில் நடக்கும் பிறப்பு மற்றும் இறப்புகளுக்கு கட்டணமில்லா சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு கடந்த ஓராண்டு காலமாக முக்கிய நகரங்களில் வழங்கப்பட்டு வந்தது . இந்நிலையில், பேராவூரணி அரசு மருத்துவமனையில் பிறந்த திருவிடைமருதூர் அருகே உள்ள ஆரலூர் பகுதியைச் சேர்ந்த கமல்ஹாசன்-சிநேகா தம்பதியின் பெண் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்கு வந்திருந்த, சுகாதாரத் துறை இணை இயக்குநர் அ. காந்தி, குழந்தையின் தந்தையிடம் பிறப்பு சான்றிதழை வழங்கினார். முதன்மை குடிமை மருத்துவ அலுவலர் பாஸ்கர் மற்றும் சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.