தேசிய இறகுப் பந்து: பட்டுக்கோட்டை நகராட்சிப் பள்ளி மாணவர்கள் சாதனை
By DIN | Published On : 19th May 2019 08:49 AM | Last Updated : 19th May 2019 08:49 AM | அ+அ அ- |

அகில இந்திய அளவிலான இறகு பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டி பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் உள்ள குருநானக்தேவ் பல்கலைக் கழகத்தில் மே 10, 11, 12 ஆகிய தேதிகளில் ஆல் இந்தியா யூத் ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அஸோசியேஷன் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பட்டுக்கோட்டை கண்டியன் தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எம்.ஈசன், எஸ்.எம்.சச்சின் சரண் ஆகியோர் இரட்டையர் பிரிவில் 2-ம் இடம் பெற்று, வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
ஏற்கெனவே இருவரும் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்று, தற்போது நடைபெற்ற தேசிய அளவிலானப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
தேசிய அளவில் சாதனை நிகழ்த்தி பட்டுக்கோட்டைக்கும், படிக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்த இரு மாணவர்கள், இவர்களுக்குப் பயிற்சியளித்த ரமேஷ் ஆகியோரை பள்ளித் தலைமை ஆசிரியை எல். ராணி மற்றும்
ஆசிரியர்கள், பட்டுக்கோட்டை இறகு பந்தாட்ட கழக நிர்வாகிகள் பாராட்டினர்.