வருவாய்த் துறையினர் ஆய்வுக் கூட்டம்
By DIN | Published On : 19th May 2019 08:48 AM | Last Updated : 19th May 2019 08:48 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை வருவாய் அலுவலர் அலுவலகத்தில் வருவாய்த் துறையினர் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், நீர் நில புறம்போக்கு நிலங்களை கணக்கீடு செய்வது, ஆட்சேபணையற்ற புறம்போக்கு இடங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்வது என்பன உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், மண்டல துணை வட்டாட்சியர்கள் தர்மராஜ், செல்வராஜ், வருவாய் அதிகாரி மஞ்சுளா மற்றும் சரக கிராம நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.