விவசாய தொழிலாளர்களுக்குப் பயிற்சி வகுப்பு
By DIN | Published On : 19th May 2019 08:43 AM | Last Updated : 19th May 2019 08:43 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் கணபதி நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
மாநிலக் குழு உறுப்பினர் சி. நாகராஜன் தலைமை வகித்தார். சங்க வளர்ச்சியும் நமது பணிகளும் என்ற தலைப்பில் மாநிலச் செயலர் எம். சின்னதுரை, நூறு நாள் வேலைத் திட்டம் என்ற தலைப்பில் மாநிலப் பொதுச் செயலர் வி. அமிர்தலிங்கம், நலத்திட்டங்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்ற தலைப்பில் மாவட்டத் தலைவர் ஆர். வாசு, எதிர்காலக் கடமைகள் என்ற தலைப்பில் மாவட்டச் செயலர் கே. பக்கிரிசாமி ஆகியோர் பயிற்சி அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் கோ. நீலமேகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் என்.வி. கண்ணன், விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கே. அபிமன்னன், எம். சம்சுதீன், ஆர். உமாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.