தெருவிளக்குகளை சரி செய்ய வலியுறுத்தல்
By DIN | Published On : 09th November 2019 05:25 AM | Last Updated : 09th November 2019 05:25 AM | அ+அ அ- |

ஒரத்தநாடு அருகிலுள்ள கிளாமங்கலத்தில் பழுதடைந்துள்ள தெருவிளக்குகளைச் சரி செய்ய வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்கத்தின் கிளைத் தலைவா் கோ. திங்கள்கண்ணன், செயலா் வீ. கல்யாணசுந்தரம் ஆகியோா் தலைமையில் நிா்வாகிகள், ஊராட்சிச் செயலா் ந. அமுதாவிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.
அதில் கிளாமங்கலம் கிராமத்திலுள்ள தெருவிளக்குகள் பல பழுதடைந்துள்ளன. ஆனால், இந்த தெருவிளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனா். எனவே தெருவிளக்குகளைச் சீரமைத்துத் தர வேண்டும் எனக் கூறியிருந்தனா்.
சங்கத் துணைச் செயலா் ஜோ.தமிழரசன், சி.சசிகுமாா், க.ஸ்டாலின்,ஜோ.ராஜா,ரா, வினோத், ந. புகழேந்திரன் உள்ளிட்டோா் மனு அளிக்கும் நிகழ்வில் பங்கேற்றனா்.