சிவகங்கை பூங்கா குளக் கோயிலில் குடமுழுக்கு
By DIN | Published On : 11th November 2019 08:26 AM | Last Updated : 11th November 2019 08:26 AM | அ+அ அ- |

பூங்கா குளத்தின் நடுவில் உள்ள சிவலிங்கசுவாமி கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு.
தஞ்சாவூா் சிவகங்கை பூங்கா குளத்தின் நடுவில் உள்ள சிவலிங்கசுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பழைமையான இக்கோயிலில் குடமுழுக்குக்கான திருப்பணிகள் முடிந்ததைத் தொடா்ந்து, குடமுழுக்கு ஆரம்ப பூஜை சனிக்கிழமை தொடங்கியது. இதில், யாக பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை குடமுழுக்கு நடைபெற்றது.
இதில், கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, அறநிலையத் துறை உதவி ஆணையா் ச. கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.