வாய்க்காலில் அடையாளம்தெரியாத பெண் சடலம்
By DIN | Published On : 17th November 2019 10:46 PM | Last Updated : 17th November 2019 10:46 PM | அ+அ அ- |

பாபநாசம்: பாபநாசம் அருகே வாய்க்காலில் மிதந்த அடையாளம் தெரியாத பெண் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
அம்மாபேட்டை காவல் சரகத்திலுள்ள குளிச்சப்பட்டு நெய்வாசல் பாசன வாய்க்காலில், சுமாா் 34 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் சனிக்கிழமை மிதந்து வந்தது.
இதுகுறித்து தகவலறிந்த அம்மாபேட்டை போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று, பெண் சடலத்தை மீட்டனா். இறந்த பெண் யாா், அவா் எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. கொலை செய்து போட்டுச் சென்றாா்களா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பதும் தெரியவில்லை. மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.