இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநாடு தொடக்கம்
By DIN | Published On : 01st September 2019 02:56 AM | Last Updated : 01st September 2019 02:56 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் இரு நாள் மாவட்ட மாநாடு சனிக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, தஞ்சாவூர் ரயிலடியிலிருந்து பேரணி தொடங்கி ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் முடிவடைந்தது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர், ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், பாலியல் வன்கொடுமையைத் தடுக்க வேண்டும். முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். டெல்டாவை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் தடுக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சம்மேளனத்தின் மாவட்டச் செயலர் ம. விஜயலஷ்மி தலைமை வகித்தார். மாநிலச் செயலர் பி. பத்மாவதி, துணைச் செயலர் எம். கண்ணகி, பாரத் கல்விக் குழுமச் செயலர் புனிதா கணேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். திமுக தெற்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் அஞ்சுகம் பூபதி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலர் எஸ். தமிழ்ச்செல்வி, தெற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் ரேவதி ராஜூ, மதிமுக மாநில மகளிரணிச் செயலர் ரொகையா ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
சம்மேளன மாவட்டத் தலைவர் தமயந்தி திருஞானம், மாவட்டத் துணைத் தலைவர்கள் எஸ். தனசீலி, டி. கண்ணகி, துணைச் செயலர்கள் ப. தாமரைச்செல்வி, ஏ. எஸ்தர் லீமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை பெசன்ட் அரங்கத்தில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறவுள்ளது.