பட்டுக்கோட்டையில் ரத்த தான முகாம்
By DIN | Published On : 01st September 2019 02:46 AM | Last Updated : 01st September 2019 02:46 AM | அ+அ அ- |

பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பட்டுக்கோட்டை கிளையும், தஞ்சை அரசு மருத்துவமனையும் இணைந்து நடத்திய முகாமில் 53 பேர் ரத்த தானம் வழங்கினர். இவர்களுக்கு அரசு சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. முகாமையொட்டி பலருக்கு ரத்த வகை கண்டறியப்பட்டது. இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்ட மருத்துவ அணிச் செயலர் ஹாஜா ஜியாவுதீன் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் என். பாஸ்கர், தொழிலதிபர் எஸ். ஆர். ரகு, சமூக ஆர்வலர் ஏ.கே. குமார், கலாம் நண்பர்கள் குழு நிர்வாகி பாலமுருகன், பள்ளித் தலைமை ஆசிரியை வைரமணி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முகாமில் கலந்து கொண்டனர்.