பேராவூரணி வட்டத்தில் கிராம உதவியாளர் பணி
By DIN | Published On : 01st September 2019 02:54 AM | Last Updated : 01st September 2019 02:54 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டத்தில் வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள 12 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
இதுகுறித்து பேராவூரணி வட்டாட்சியர் க. ஜெயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளது
பேராவூரணி வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களில் 12 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பேராவூரணி வட்டத்திற்குட்பட்ட கிராமம் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் உள்ளவர்கள் மட்டும் இனச் சுழற்சி அடிப்படையில் மாவட்ட வேலைவாய்ப்பக முதுநிலை வரிசையின் படி நியமனம் செய்யப்படுவர். விண்ணப்பங்களை 31.8.2019 முதல் 10.9.2019 க்குள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பேராவூரணி வட்டாட்சியரகத்தில் அளிக்கலாம்.
குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் அல்லது பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் தோல்வியுற்றவர்கள் தகுதியுடையவர்கள். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். தகுதியுள்ள மனுதாரர்களுக்கு பேராவூரணி வட்ட அலுவலகத்தில் நடைபெறும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள தனியே அழைப்புக் கடிதம் அனுப்பப்படும்.