தஞ்சாவூரில் செப். 13-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
By DIN | Published On : 11th September 2019 08:56 AM | Last Updated : 11th September 2019 08:56 AM | அ+அ அ- |

"மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செப். 13-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 10-க்கும் அதிகமான தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு பணி காலியிடங்களுக்குப் பணி வாய்ப்புகளை வழங்கவுள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஐடிஐ, டிப்ளமோ, இளநிலைப் பட்டம் படித்தவர்களும் (வயது வரம்பு 18-க்கு மேல் 30-க்குள்) கலந்து கொள்ளலாம்.
இந்த நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் (வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, மாற்றுச் சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை) மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் செப். 13ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நேரில் ஆஜராகி பயன்பெறலாம்' என்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் (பொறுப்பு) பரமேஸ்வரி தெரிவித்துள்ளார் .