விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
By DIN | Published On : 11th September 2019 08:57 AM | Last Updated : 11th September 2019 08:57 AM | அ+அ அ- |

பேராவூரணியில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற பெருமகளுர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது .
அண்மையில் பேராவூரணியில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான தடகள மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் பெருமகளுர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் 16 பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 120 புள்ளிகளுடன் பெருமகளுர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இரண்டாமிடம் பிடித்தனர்.
சிறப்பிடம் பெற்ற மாணவிகள் மற்றும் வெற்றிக்கு பாடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் வி. ஜெய்சங்கர், உடற்கல்வி ஆசிரியை சுதா ஆகியோரை பள்ளித் தலைமையாசிரியர் (பொ ) பொன்னம்மாள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ராமமூர்த்தி, சுப்பையன், ஆசிரியர்கள் எஸ்.சுபாஷ்கரன், பட்டதாரி ஆசிரியர் சிற்றரசன், காமாட்சி, பாண்டியன், இந்துமதி, பார்வதிப்ரியா, சீதாலெட்சுமி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.