உலக அமைதி தின விழிப்புணர்வு நிகழ்வு
By DIN | Published On : 22nd September 2019 03:33 AM | Last Updated : 22nd September 2019 03:33 AM | அ+அ அ- |

உலக அமைதி தினத்தையொட்டி, செங்கிப்பட்டியில் விழிப்புணர்வு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
செங்கிப்பட்டியிலுள்ள கேர்-டி நிறுவனம் சார்பில், ஆயுதமில்லா உலகைப் படைக்க வாருங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்வை சமூகப் பணியாளர் செபஸ்டின் சார்லி தொடக்கி வைத்துப் பேசினார். பூதலூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் மலர்கொடி, செங்கிப்பட்டி ஊராட்சிச்செயலர் ரெங்கநாயகி ஆகியோர் சிறப்புரையாற்றினர். 100- க்கும் மேற்பட்ட வளரிளம் பெண்கள், பொதுமக்கள் நிகழ்வில் பங்கேற்றனர். நிறைவில் கார்த்திகா நன்றி கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...