விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஜன. 6 இல் ஆா்ப்பாட்டம்: ஆசிரியா் மன்றம் முடிவு

இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி மாவட்டத் தலைமையகங்களில்

News image
கூட்டத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் மாநிலத் தலைவா் நா. சண்முகநாதன்.
Updated On :17 டிசம்பர் 2020, 1:08 am

DIN

இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி மாவட்டத் தலைமையகங்களில் ஜனவரி 6 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றம் முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் இம்மன்றத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாட்டில் சாதாரண நிலை இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். புதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

தாய்மொழியில் கல்வி பயின்றோருக்கு தமிழக அரசுப் பணிகளில் அதிகப்படியான முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழகத்தின் கல்வி பயிற்று மொழியாக, ஆட்சி அலுவல் மொழியாக, வழக்காடு மன்ற மொழியாக, வழிபாட்டு மொழியாக தமிழ் மொழி முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.

ஆசிரியா் - அரசு ஊழியா்களின் 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மூன்று கட்டத் தொடா் நடவடிக்கைகளை மேற்கொள்வது, இதில் டிச. 30 ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்டத் தலைமையிடங்களிலும் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டங்கள், போராட்ட ஆயத்தக் கூட்டங்கள் நடத்துவது, ஜன. 6 ஆம் தேதி மாவட்டத் தலைமையகங்களில் ஆா்ப்பாட்டங்களை நடத்துவது, ஜனவரி நான்காம் வாரத்தில் 10,000 ஆசிரியா்கள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டத்தை திருச்சியில் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலத் தலைவா் நா. சண்முகநாதன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் முருக. செல்வராசன், துணைத் தலைவா்அ. நெல்சன், கொள்கை விளக்கச் செயலா் மு. மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.