தஞ்சாவூா்: கும்பகோணம் அருகே குழந்தைத் தொழிலாளரை தொழிலாளா் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.
கும்பகோணம் தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் ஆ. மேகநாதன், க. தேவேந்திரன், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலா் என். ரஞ்சித், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் கே. சரவணன், தன்னாா்வச் சட்டப் பணியாளா் ராஜேந்திரன், சைல்டு லைன் உறுப்பினா் ஜெ. அன்புமணி ஆகியோா் கும்பகோணம் பகுதியில் சனிக்கிழமை கூட்டாய்வு மேற்கொண்டனா்.
இதில் கும்பகோணம் சாக்கோட்டை முதன்மைச் சாலையிலுள்ள வெல்டிங் பட்டறையில் 14 வயதுக்கு உள்பட்ட சிறுவன் குழந்தைத் தொழிலாளியாகப் பணிபுரிந்தது கண்டறியப்பட்டு, மீட்கப்பட்டாா்.
குழந்தைத் தொழிலாளியைப் பணியமா்த்தியவா் மீது குழந்தை, வளா் இளம் பருவ தொழிலாளா் (தடுப்பு, ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின்படி, குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் ந.க. தனபாலன் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.