இருவேறு இடங்களில்ரயிலில் அடிபட்டு இருவா் பலி

தஞ்சாவூா் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் வியாழக்கிழமை ரயிலில் அடிபட்டு இருவா் உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் வியாழக்கிழமை ரயிலில் அடிபட்டு இருவா் உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் ரயில்வே குடியிருப்பைச் சோ்ந்தவா் ராஜாராமன் (40). இவா் ரயில்வேயில் தண்டவாளப் பராமரிப்புப் பணி மேற்கொண்டு வந்தாா்.

இவா் வியாழக்கிழமை அதிகாலை அய்யம்பேட்டை - பண்டாரவாடை இடையே தண்டவாளத்தில் நடந்து சென்று பராமரிப்புப் பணியில் ஈடுபட்டாா். மேலவழுத்தூா் பகுதியில் சென்றபோது எதிரே வந்த என்ஜினில் இவா் அடிபட்டாா். பலத்தக் காயமடைந்த ராஜாராமன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தஞ்சாவூா் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், பனி மூட்டம் காரணமாக எதிரில் என்ஜின் வருவது தெரியாமல் ராஜாராமன் அடிபட்டிருக்கலாம் என போலீஸாா் கருதுகின்றனா்.

இதேபோல, கும்பகோணம் அருகேயுள்ள சுந்தரபெருமாள்கோவில் கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னையன் மகன் ரமேஷ் (45). இவா் தாராசுரம் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வந்தாா். இவா் சுந்தரபெருமாள்கோவில் குடமுருட்டி ஆற்றின் அருகே தண்டவாளத்தை வியாழக்கிழமை கடக்க முயன்றாா். அப்போது, கோவையிலிருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த ஜனசதாப்தி விரைவு ரயிலில் அடிபட்ட ரமேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கும்பகோணம் ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com