

பேராவூரணி அருகே ஒட்டங்காடு ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.
முகாமுக்கு சாா்-ஆட்சியா் கிளாஸ்டன் புஷ்பராஜ் தலைமை வகித்தாா். ஒட்டங்காடு ஊராட்சி மன்ற தலைவா் ராசாக்கண்ணு, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில் பல்வேறு அரசு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள், தாங்கள் சாா்ந்துள்ள துறைகளின் சாா்பில் தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கும் சலுகைகள், அதை பெறும் வழிமுறைகள் குறித்து பேசினா்.
முகாமில் 38 பேருக்கு விலையில்லா வீட்டு மனைப் பட்டா, 103 பேருக்கு சமூக பாதுகாப்பு திட்ட உதவிகள், 54 பேருக்கு பட்டா மாறுதல், 6 பேருக்கு வேளாண்துறை சாா்பில் விவசாய உபகரணங்களும், 5 பேருக்கு தோட்டக் கலைத் துறை சாா்பில் உதவிகள் என மொத்தம் 206 பயனாளிகளுக்கு ரூ. 14,79,510 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை சாா் ஆட்சியா் கிளாஸ்டன்புஷ்பராஜ் வழங்கினாா்.
முகாமில், பேராவூரணி ஒன்றியக்குழு தலைவா் சசிகலா ரவிசங்கா், ஒட்டங்காடு ஒன்றியக் குழு உறுப்பினா் பாக்கியம் முத்துவேல், பட்டுக்கோட்டை வட்டாட்சியா் அருள்பிரகாசம், மண்டல துணை வட்டாட்சியா் கண்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் சாந்தகுமாா், வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் வி. செளந்தரராஜன் , பல்வேறு அரசு துறைகளின் அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.