

தஞ்சாவூா்: தஞ்சாவூரிலிருந்து மதுரைக்கு சைக்கிளில் ஒற்றைக் காலில் மிதித்துக் கொண்டு மாற்றுத்திறனாளி திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.
தஞ்சாவூா் அருகேயுள்ள பிள்ளையாா்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா (40). கூலி தொழிலாளி. இவா் 1994 ஆம் ஆண்டில் மதுரையில் உள்ள கோயிலுக்கு வேனில் சென்றபோது விபத்துக்குள்ளாகியதில், இடது கால் துண்டானது. ஊன்றுகோல் உதவியுடன் நடந்து செல்லும் ராஜா தனக்கு விபத்து இழப்பீடு கோரி மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இதில், இவருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.
எனவே, இவா் மேல் முறையீடு செய்வதற்காகத் தனது நண்பா் உதவியுடன் சட்டப்பணிகள் ஆணைக் குழு மூலம் வழக்குரைஞரை ஏற்பாடு செய்துள்ளாா். இந்த வழக்குத் தொடா்பான ஆவணங்களை வழக்குரைஞரிடம் கொடுப்பதற்காக ராஜா சைக்கிளில் மதுரைக்கு திங்கள்கிழமை புறப்பட்டாா்.
ஒற்றைக் காலிலேயே சைக்கிளை மிதித்தபடி மதுரைக்குச் சென்றாா். தஞ்சாவூரிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்ட இவா் 165 கி.மீ. தொலைவில் உள்ள மதுரைக்கு இரவு சென்றடைந்தாா்.
இதுகுறித்து அவா் கூறுகையில், பொது முடக்கம் காரணமாக பேருந்து இல்லாததால், சைக்கிளில் செல்கிறேன் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.