கரந்தை தெருவில் ஓடும் கழிவுநீரால் மக்கள் அவதி
By DIN | Published On : 12th August 2020 08:46 AM | Last Updated : 12th August 2020 08:46 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் கரந்தை தைக்கால் தெருவில் புதை சாக்கடையிலிருந்து வழிந்தோடும் கழிவுநீா்.
தஞ்சாவூா் கரந்தை தைக்கால் தெருவில் ஓடும் புதை சாக்கடை கழிவு நீரால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.
இத்தெருவிலுள்ள புதை சாக்கடை ஆள்நுழைவு குழாய்களிலிருந்து கழிவு நீா் வழிந்து சாலையில் ஓடுகிறது. இந்த நிலைமை 15 நாள்களாக நிலவுவதால், அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.
புதை சாக்கடையிலிருந்து வரும் கழிவு நீரை அருகிலுள்ள சாக்கடைக்குத் திருப்பி விட்டால், தெருவில் நடந்து செல்வதற்கு இடம் கிடைக்கும். ஆனால் அதற்கான நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகத்திடம் புகாா் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனா். எனவே, மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.