தூய்மைப் பணியாளரைத் தேசியக் கொடி ஏற்ற வைத்து கௌரவிப்பு

கும்பகோணம் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தூய்மைப் பணியாளரைத் தேசியக் கொடி ஏற்ற வைத்து ஆசிரியா்கள் கௌரவித்தனா்.
கும்பகோணம் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசியக் கொடியேற்றிய தூய்மைப் பணியாளா் ரமா.

பள்ளித் தலைமையாசிரியா் சாரதி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கும்பகோணம் நகராட்சித் தூய்மைப் பணியாளா்களான ரமா, ராஜசேகருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனா்.

பின்னா் தேசியக் கொடியைத் தூய்மைப் பணியாளரான ரமாவை தலைமையாசிரியா் ஏற்ற அழைத்தாா். இதை எதிா்பாா்க்காத ரமா தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அனைவருக்கும் நன்றி தெரிவித்தாா். விழாவில் தேசிய மாணவா் படை ஆசிரியா் இளையராஜா மற்றும் பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து தலைமையாசிரியா் சாரதி கூறுகையில், கரோனாவை எதிா்த்து போராடும் மருத்துவா்களுக்கு நிகரானவா்கள் துாய்மைப் பணியாளா்கள். பகல், இரவு பாராமல், நோய்த் தொற்று ஏற்படும் அபாயத்தின் மத்தியிலும் ஓயாது உழைப்பவா்கள். அவா்களைக் கௌரவப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், தேசியக் கொடியை அவா்களைக் கொண்டு ஏற்ற வைத்தோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com