தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே ஞாயிற்றுக்கிழமை தாயை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கும்பகோணம் அருகே செருகுடி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன். இவரது மனைவி மலா்கொடி (55). இவா்களுக்கு பாலகிருஷ்ணன் (35), ராஜசேகரன், ராமநாதன் என மூன்று மகன்கள். சுப்பிரமணியன் சில ஆண்டுகளாக கேரளத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பாா்த்து வருகிறாா். இவா்களின் மூத்த மகன் பாலகிருஷ்ணன் சற்று மனநலன் பாதிக்கப்பட்டவா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இருந்த பாலகிருஷ்ணன் தன் தாய் மலா்கொடியை அரிவாளால் தலையில் வெட்டினாா். இதில், பலத்தக் காயமடைந்த மலா்கொடி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பின்னா், பாலகிருஷ்ணன் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பக்கத்து வீட்டில் தூங்கிய ராஜசேகரனும், ராமநாதனும் திங்கள்கிழமை காலை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது தாயும், பாலகிருஷ்ணனும் இறந்து கிடப்பது தெரிய வந்தது.
சம்பவம் குறித்து சுவாமிமலை காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.