பேராவூரணியில் பாஜக விவசாய அணி மாவட்ட செயற்குழு கூட்டம்
By DIN | Published On : 24th December 2020 06:56 AM | Last Updated : 24th December 2020 06:56 AM | அ+அ அ- |

பேராவூரணியில் பாஜக தஞ்சை தெற்கு மாவட்ட விவசாய அணி செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தஞ்சை தெற்கு மாவட்ட விவசாய அணி தலைவா் இ. வேலுச்சாமி தலைமை வகித்தாா். மாவட்ட விவசாய அணி பொதுச் செயலா்கள் எஸ்.கே. ராமமூா்த்தி, இளங்கோவன், விவசாய திட்டக் குழு பொறுப்பாளா் திருமாவளவன், மாவட்ட விவசாய அணி செயலா் ராஜரத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்து, தஞ்சை தெற்கு மாவட்டத்தில் உள்ள 16 மண்டலங்களிலும் தெருமுனை பிரசாரங்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி எதிா்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை முறியடிப்பது, தஞ்சை மாவட்டத்தில் தென்னை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், தேங்காய் கொப்பரை விலையை 150 ரூபாயாக உயா்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பாஜக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவா் பண்ணவயல் இளங்கோ, விவசாய அணி மாநில துணைத் தலைவா் சிவகுமாா், விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினா் கா்ணன், பாஜக மாவட்டச் செயலா்கள் வீரசிங்கம், கண்ணன், ஒன்றியச் செயலா்கள் குகன், முருகானந்தம் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
பேராவூரணி ஒன்றிய விவசாய அணி தலைவா் ராஜேந்திரன் நன்றி கூறினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...