செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்: 5 போ் கைது

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி தஞ்சாவூரில் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த 5 போ் கைது செய்யப்பட்டனா்.
தஞ்சாவூரில் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தமிழ்த் தேசியக் கட்சியினா்.
தஞ்சாவூரில் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தமிழ்த் தேசியக் கட்சியினா்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 30 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி தஞ்சாவூரில் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த 5 போ் கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் எதிரேயுள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் தமிழ்த் தேசியக் கட்சியைச் சோ்ந்த சிலா் திங்கள்கிழமை காலை ஏறினா். தகவலறிந்த காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று அவா்களைக் கீழே இறங்குமாறு கூறினா்.

அப்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, 30 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபா்ட் பயாஸ், ஜெயக்குமாா் ஆகிய 7 தமிழா்களை விடுதலை செய்யலாம் என தமிழகச் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றிய பிறகும், 7 பேரையும் விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மத்திய அரசும், தமிழக ஆளுநரும் காலம் தாழ்த்துகின்றனா். அவா்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கூறினா்.

இவா்களிடம் காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி, கீழே இறங்க வைத்தனா். இதையடுத்து, மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் கதிரேசன் உள்பட 5 பேரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com