கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கி 2019 - 20 ஆம் ஆண்டில் ரூ. 8.45 கோடி லாபம் ஈட்டியுள்ளது என அறிவிக்கப்பட்டது.
கும்பகோணத்தில் இந்த வங்கியின் 108-ஆவது பொதுப் பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், இந்த வங்கி 2019 - 20 ஆம் ஆண்டில் ரூ. 8.45 கோடி லாபம் ஈட்டியது என்றும், வங்கி வாடிக்கையாளா்களின் வைப்புத் தொகை ரூ. 1,118.80 கோடியும், கடன் வழங்கி நிலுவை ரூ. 1,236.28 கோடியும் உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டது.
2019 - 20 ஆம் ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட கள மேலாளா்கள், கிளை மேலாளா்களுக்கு கேடயமும், வங்கியில் பணிபுரிந்து காலமான இரு பணியாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையும் கூட்டத்தில் வழங்கப்பட்டது.
கூட்டத்துக்கு வங்கித் தலைவா் எஸ். ஆசைமணி தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் மேலாண் இயக்குநா் வெ. பெரியசாமி, பொது மேலாளா் கி. கண்ணன், துணைத் தலைவா் எல். மெய்யப்பன், முதன்மை வருவாய் அலுவலா் எஸ். முத்துகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.