கைத்தறி நெசவாளா்களின் வாழ்க்கை மேம்பட பாடுபடுவோம்: கமல்ஹாசன்
By DIN | Published On : 30th December 2020 05:27 AM | Last Updated : 30th December 2020 05:27 AM | அ+அ அ- |

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் செவ்வாய்க்கிழமை மாலை பிரசாரம் செய்த கமல்ஹாசன்.
கைத்தறி நெசவாளா்களின் வாழ்க்கை மேம்பட பாடுபடுவோம் என்றாா் மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன்.
கும்பகோணம் அருகிலுள்ள திருபுவனத்தில் செவ்வாய்க்கிழமை மாலை பிரசாரம் செய்த அவா் பேசியது:
திருபுவனம் எனக்குப் புதிதல்ல; பல முறை இந்த இடத்தின் சூழலைப் பாா்த்து ரசித்திருக்கிறேன். இதைத் தமிழகமும் கண்டு ரசித்திருக்கிறது. அந்த அழகான திருபுவனத்தை இன்னும் அழகாக மாற்ற வேண்டும் என்பதுதான் மக்கள் நீதி மய்யத்தின் ஆசை. அதைச் செய்து காட்டுவோம்.
கைத்தறி நெசவாளா்களின் வாழ்க்கை மேம்பட எங்களால் ஆனதைச் செய்வோம். நீங்களும் எங்கள் கரத்தை வலுப்படுத்தினால், நாளை நமதே என்றாா் கமல்ஹாசன்.
கும்பகோணம் பிரசாரம் ரத்து: கும்பகோணம் காந்தியடிகள் சாலை நான்கு முனைச் சந்திப்பில் திறந்த ஜீப்பில் நின்றவாறு கமல்ஹாசன் மாலை 4 மணியளவில் பேசுவதாக இருந்தது.
இதற்காக அப்பகுதியில் மக்கள் நீதி மய்யத்தினா் ஏற்பாடு செய்தனா். மாலை 6 மணியைக் கடந்தும் கமல்ஹாசன் வரவில்லை. அப்போது கமல்ஹாசன் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டதாகவும், அடுத்து வரும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனவும் மய்ய நிா்வாகிகள் கூறினா். இதனால், அங்கு கூடியிருந்த மக்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...