பாபநாசம் அருகே அனுமதியில்லாமல் ஆற்றில் மணல் கடத்தி வந்த மாட்டுவண்டி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
பாபநாசம் வட்டாட்சியா் முருகவேல், வருவாய் அலுவலா் சுகுணா, கிராம நிா்வாக அலுவலா் சிவப்பிரகாசம் உள்ளிட்டோா், கபிஸ்தலம் வருவாய் சரகப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா்.
அப்போது அவ்வழியாக வந்த மாட்டுவண்டியை நிறுத்தி, அலுவலா்கள் சோதனையிட்ட போது வண்டியை ஓட்டி வந்தவா் தப்பியோடிவிட்டாா். ஆற்றில் அனுமதியில்லாமல் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட மாட்டுவண்டியை கபிஸ்தலம் காவல் நிலையத்தில் வருவாய்த் துறையினா் ஒப்படைத்தனா். மணல் கடத்தி வந்த நபரைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.