ராஜராஜனுக்கு 42 சிறப்புப் பெயர்கள்

மாமன்னன் ராஜராஜ சோழனை பெரும்பாலான கல்வெட்டுகள் அருமொழி எனக் குறிப்பிடுகின்றன.
ராஜராஜனுக்கு 42 சிறப்புப் பெயர்கள்
Updated on
1 min read



மாமன்னன் ராஜராஜ சோழனை பெரும்பாலான கல்வெட்டுகள் அருமொழி எனக் குறிப்பிடுகின்றன. தஞ்சைப் பெரியகோயிலின் இரண்டாம் வாயிலான ராஜராஜன் கோபுர வாயில் கல்வெட்டில் அருண்மொழி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுமட்டுமல்லாமல் ராஜராஜசோழனுக்கு 42 சிறப்புப் பெயர்களும் சூட்டப்பட்டன. அவை:

அபயகுலசேகரன், அரிதுர்க்கலங்கன், அருள்மொழி, அழகிய சோழன், இரணமுகபீமன், இராஜாச்ரயன், சோழேந்திரசிம்மன், இராஜமார்த்தாண்டன், இராஜேந்திரசிம்மன், இராஜவிநோதன், இரவிகுல மாணிக்கன், இரவிவம்ச சிகாமணி, இராஜ கண்டியன், இராஜ சர்வக்ஞன், இராஜராஜன், இராஜகேசரிவர்மன், உத்தமசோழன், உத்துங்கதுங்கன், உய்யகொண்டான், உலகளந்தான், கேரளாந்தகன், திருமுறை கண்ட சோழன், தெலிங்ககுல காலன், நிகரிலி சோழன், நித்யவிநோதன், பண்டித சோழன், பாண்டிய குலாசனி, பெரிய பெருமாள், மும்முடிச் சோழன், மூர்த்த விக்கரமாபரணன், சண்ட பராக்ரமன், சத்ரு புஜங்கன், சிங்களாந்தகன், 
சிவபாதசேகரன், சோழகுல சுந்தரன், சோழ மார்த்தாண்டன், ஜனநாதன், ஜெயங்கொண்ட சோழன், சத்திரிய சிகாமணி, கீர்த்தி பராக்கிரமன், சோழ நாராயணன், தைல குலகாலன். 
இதிலுள்ள சிவபாத சேகரன், திருமுறைகண்ட சோழன், இராஜவிநோதன், பண்டித சோழன், பெரிய பெருமாள், ஜனநாதன் ஆகிய பட்டங்களின் ஒட்டுமொத்தமான உருவமே தஞ்சைப் பெரியகோயில்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com