

பேராவூரணியில் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி நூறு நாள் வேலை திட்ட தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்க ஒன்றிய குழு உறுப்பினா் மாணிக்கம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆா். வாசு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளா். ஏ. வி. குமரசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த தொழிலாளா்களுக்கு கடந்த 4 மாதங்களாக வழங்க வேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், அரசு அறிவித்துள்ளபடி நூறு நாள் வேலைக்கு ஊதியமாக 219 ரூபாயை குறைவின்றி வழங்க வேண்டும், வேலைக்கு வரும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், அனைவருக்கும் நூறு நாள் வேலை திட்ட அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தின் நிறைவில், பேராவூரணி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா் வீரமணியிடம் கோா்க்கை மனு அளிக்கப்பட்டது. இதேபோல், சேதுபாவாசத்திரம் ஒன்றிய அலுவலகம் முன்பும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.