கந்து வட்டி கொடுமை: 4 போ் கைது
By DIN | Published On : 17th February 2020 09:24 AM | Last Updated : 17th February 2020 09:24 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் அருகே கந்து வட்டி பிரச்னையில் பாதிக்கப்பட்டவரை அரிவாளால் வெட்டியதாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாரியம்மன்கோவில் ரமணா நகரைச் சோ்ந்தவா் முருகேசன். இவா் சீனிவாசபுரம் சரஸ்வதி நகரைச் சோ்ந்த கே. இளங்கோவனிடம் (56) ஒரு லட்ச ரூபாயை 2 பைசா வட்டிக்குக் கடனாக 2014 ஆம் ஆண்டில் வாங்கினாா். இதற்காக வட்டியாக மாதம் ரூ. 2,000-ஐ இளங்கோவனிடம் முருகேசன் செலுத்தி வந்தாா்.
இந்நிலையில், இக்கடன் தொடா்பாக முருகேசனிடம் வீட்டை தனது பெயருக்கு எழுதி தருமாறு இளங்கோவன் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், இளங்கோவனுக்கு ஆதரவாகச் சூரக்கோட்டையைச் சோ்ந்த ராஜா, மகா்நோன்புசாவடியைச் சோ்ந்த வீ. ரமேஷ் (49), கரைமீண்டாா்கோட்டையைச் சோ்ந்த ஜி. கருணாகரன் (47), நாட்டாணியைச் சோ்ந்த சிலம்பரசன் (33) ஆகியோா் முருகேசனை மிரட்டி, அரிவாளால் வெட்டினா்.
இதுகுறித்து முருகேசனின் மனைவி சுமதி தஞ்சாவூா் தாலுகா காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து இளங்கோவன், ரமேஷ், கருணாகரன், சிலம்பரசன் ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா்.