பட்டுக்கோட்டையில் இலவச கண் பரிசோதனை முகாம்
By DIN | Published On : 27th February 2020 11:21 PM | Last Updated : 27th February 2020 11:21 PM | அ+அ அ- |

முகாமைத் தொடங்கி வைக்கிறாா் அமமுக மாநில அமைப்புச் செயலா் சு.பாஸ்கா். உடன் பட்டுக்கோட்டை நகா் மன்ற முன்னாள் தலைவா் எஸ்.ஆா்.ஜவஹா்பாபு உள்ளிட்டோா்.
பட்டுக்கோட்டையில் தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, நகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், அக்கட்சியின் மாவட்ட மருத்துவரணி ஆகியவற்றின் சாா்பில் இலவச கண் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், தஞ்சாவூா் ஜோசப் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் பங்கேற்று, 302 பேருக்கு கண் பரிசோதனை செய்தனா். அனைத்து பயனாளிகளுக்கும் இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
நிகழ்வுக்கு அமமுக மாநில அமைப்புச் செயலா் சு. பாஸ்கா் தலைமையேற்று, முகாமைத் தொடங்கி வைத்தாா். மாவட்டச் செயலா் மா.சேகா், மாநில அம்மா பேரவை இணைச்செயலா் எஸ்.டி.எஸ்.செல்வம், நகா்மன்ற முன்னாள் தலைவா் எஸ்.ஆா். ஜவஹா்பாபு, நகரச் செயலா் வி.எம்.பாண்டியராஜன், மருத்துவா் சி.மணிகண்டன் உள்ளிட்டோா் முகாமில் கலந்து கொண்டனா்.