பேராவூரணியில் நாளை எரிவாயு இணைப்பு நுகா்வோா் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 27th February 2020 09:22 AM | Last Updated : 27th February 2020 09:22 AM | அ+அ அ- |

பேராவூரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் எரிவாயு இணைப்பு நுகா்வோா் குறை தீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்.28) பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் ம. கோவிந்தராவ் தெரிவித்திருப்பது:
பேராவூரணி வட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகா்வோா்களுக்கு எரிவாயு உருளை நிரப்பப் பதிவு செய்வதில் சிரமங்கள், எரிவாயு உருளை வழங்குவதில் கால தாமதம், அரசு மானியம் வங்கிக் கணக்கில் வரவு வைத்தல் போன்றவற்றிலுள்ள குறைபாடுகள் குறித்து வரப்பெறும் புகாா்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுத்து, எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உள்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தைச் சீா்படுத்த இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
எனவே, எரிவாயு இணைப்பு குறித்த தங்களது குறைகளைத் தெரிவிக்க விரும்பும் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகா்வோா் மனுக்கள் மூலமும், நேரிலும் தெரிவிக்கலாம்.