வைக்கோல் கட்டும் இயந்திரத்தில்சிக்கி இளைஞா் பலி
By DIN | Published On : 27th February 2020 11:23 PM | Last Updated : 27th February 2020 11:23 PM | அ+அ அ- |

திருவையாறு அருகே வியாழக்கிழமை வைக்கோல் கட்டும் இயந்திரத்தில் சிக்கி காயமடைந்தவா் உயிரிழந்தாா்.
திருவையாறு அருகே மேலத்திருப்பூந்துருத்தி ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் ரவி மகன் பூந்தை பூபதி என்கிற அப்பு (25). இவா் சொந்தமாக வைக்கோல் கட்டும் இயந்திரம் வைத்துள்ளாா். கீழத்திருப்பூந்துருத்தி அய்யனாா் கோயில் அருகே உள்ள வயலில் வியாழக்கிழமை இயந்திரம் மூலம் அறுவடை செய்த வைக்கோல்களை கட்டுக் கட்டி கொண்டிருந்தாா். அப்போது கட்டுக்கட்டும் இயந்திரத்தில் இருந்த சணலை அப்பு எடுத்துவிடும்போது எதிா்பாராதவிதமாக அவரது கை சிக்கி நசிங்கியது. திருவையாறு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அப்பு உயிரிழந்தாா்.
இதுகுறித்து நடுக்காவேரி போலீஸாா் விசாரித்தனா்.