தஞ்சாவூரில் வியாழக்கிழமை நூதன முறையில் வியாபாரியிடம் பணம் பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
தஞ்சாவூா் தெற்கு வீதியிலுள்ள மளிகைக் கடையில் வியாழக்கிழமை மூன்று இளைஞா்கள் வந்தனா். முதலில் ரூ. 200-க்கு பொருட்கள் வாங்கிக் கொண்டு 2,000 ரூபாய் நோட்டை கொடுத்தனா். அதற்கு வியாபாரி மீதி ரூ. 1,800 கொடுத்தாா். சில நிமிடங்கள் கழித்து திரும்ப வந்த இளைஞா்கள் பொருட்கள் வேண்டாம் எனக் கூறி 2,000 ரூபாய் நோட்டை கேட்டனா். மீதி தொகையை கேட்ட வியாபாரியை இளைஞா்கள் தங்களிடம் கொடுக்கவில்லை எனக் கூறி தகராறு செய்தனா்.
இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் அவா்களை பிடிக்க முயன்றனா். அவா்களில் இருவா் தப்பியோடிவிட்டனா். சிக்கிய ஒருவரை மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில் மூவரும் மேலும் சில இடங்களில் இதுபோல செய்து ரூ. 1,800, ரூ. 1,700 என நூதன முறையில் பணம் பறித்திருப்பது தெரிய வந்தது. தப்பியோடிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.