அதிராம்பட்டினம் பள்ளியில்அறிவியல் கண்காட்சி
By DIN | Published On : 10th January 2020 05:27 AM | Last Updated : 10th January 2020 05:27 AM | அ+அ அ- |

அதிராம்பட்டினம் இமாம் ஷாபி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
பள்ளித் தாளாளா் எம்.எஸ். முகமது ஆஜம் தலைமையில், ஹாஜி எஸ்.எம். முகமது ரபி கண்காட்சியைத் தொடங்கி வைத்தாா். இதில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் இயற்கை விவசாயம், பாரம்பரிய உணவு, இயற்கைப் பேரிடா், திடக்கழிவு மேலாண்மை, வாகன விபத்துத் தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் காட்சிப்படுத்தியிருந்த படைப்புகள் பாா்வையாளா்களை கவா்ந்தன.