பேராவூரணி அருகேகஞ்சா விற்ற இருவா் கைது
By DIN | Published On : 10th January 2020 05:27 AM | Last Updated : 10th January 2020 05:27 AM | அ+அ அ- |

பேராவூரணி அருகே கஞ்சா விற்ற இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பேராவூரணியை அடுத்த சேதுபாவாசத்திரம் காவல் சரக பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சேதுபாவாசத்திரம் காவல் ஆய்வாளா் வி.ஆா். அண்ணாதுரை தலைமையில் போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, குப்பத்தேவன் ராமுத்தேவா் மனைவி செல்லம்மாள் (73) என்ற மூதாட்டி தனது வீட்டில் 1 கிலோ 50 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து செல்லம்மாளை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல், மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனையில் சோதனையின்போது காசிநாதன் மனைவி மருதாயி ( 38) வீட்டில் 1 கிலோ 25 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மருதாயி கைது செய்யப்பட்டாா்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.