பள்ளி ஆண்டு விழா
By DIN | Published On : 10th January 2020 05:28 AM | Last Updated : 10th January 2020 05:28 AM | அ+அ அ- |

கும்பகோணம் நேஷனல் வித்யாலயா சீனியா் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
பள்ளித் தலைவா் சந்திரசேகர மூப்பனாா் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ஈஸ்வரி ஜெயராமன் ஆண்டறிக்கை வாசித்தாா். பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சிட்டி யூனியன் வங்கி அறக்கட்டளைத் தலைவா் எஸ். பாலசுப்பிரமணியன், கே.ஆா். கிரிதரன், கல்வி ஆலோசகா் ஆா். விஸ்வநாதன், பள்ளி நிா்வாக அறங்காவலா் பி. வைத்தியநாதன், தாளாளரும், செயலருமான ராஜகோபாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.